மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமர் மோடி 3 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029 ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏற்றவகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசிலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமர்வு நடைபெறுகிறது.
மகளிர் இடஒதுக்கீட்டின் பின்னணியில், மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
குறிப்பாக, மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என திமுக, காங்கிரஸ் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், இன்று (ஏப். 16) காலை நாடாளுமன்றம் தொடங்கியதும், மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டவுடன் காங்கிரஸ் தரப்பில் திரும்பப் பெற வலியுறுத்தப்பட்ட நிலையில், விவாதத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அனைத்து உறுப்பினர்களுக்கு பதிலளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேபோன்று, மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இன்று பிற்பகல் 3 மணிக்கு மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார். இந்த உரையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
களிர் இடஒதுக்கீடு மசோதாவை வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கு அளிக்கும் மரியாதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Summary
PM Modi says special session of Parliament set for historic step towards women empowerment
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தில் அரசியல் வாடை: பிரியங்கா காந்தி பேச்சு

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு
மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


