கத்தாரின் எரிவாயு ஆலை மீதான தாக்குதலால் உலகளாவிய எரிவாயு விநியோகத்தில் கணிசமான பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எரிபொருள் உற்பத்தி மையங்களைக் குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஈரான் நடத்திய தாக்குதலில் கத்தார் எனர்ஜி நிறுவனம் பாதிப்புக்குள்ளானதில், உலகளாவிய எரிவாயு விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் மீதான ஈரான் தாக்குதலின் விளைவாக, கத்தாரின் ஏற்றுமதி திறன் 17 சதவிகித அளவுக்கு பாதிப்படைந்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 1.28 கோடி டன் வரை உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், எரிவாயு விநியோகம் 3 முதல் 5 ஆண்டுகள் வரையில் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக முக்கிய எரிவாயு விநியோக நாடான கத்தாரில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் எதிரொலிக்கும்.
இதனைத் தொடர்ந்து, கத்தாருடன் நீண்டகால கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளுக்கு, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு இல்லாமல், சாத்தியமுள்ள அளவே ஏற்றுமதி செய்ய இயலும் என்று நிறுவனத்தின் தரப்பிலிருந்து அவசரகால அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், இந்தியா உள்ளிட்ட நேரடி ஒப்பந்த நாடுகள் உடனடியாக பாதிப்படைவதுடன், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை உயரும்.
Summary
India sees Qatar LNG supply cut after Iran strike
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

எரிவாயு தட்டுப்பாடு? கத்தார் செல்கிறார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!

இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

