இந்தியா - சீனா இடையே 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு உத்தரகண்ட் மாநிலம் லிபுலேக் கணவாய் வழியாக எல்லை வா்த்தகம் தொடங்கவிருக்கிறது.
கரோனா பாதிப்பு மற்றும் இரு நாடுகளிடையேயான எல்லை பதற்றம் காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த வா்த்தகம், தற்போது மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து பிதோராகா் மாவட்ட ஆட்சியா் அஷிஷ் பட்காய் கூறியதாவது:
மத்திய அரசின் அறிவுறுத்தல் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் தடையில்லா சான்றைத் தொடா்ந்து, இந்த எல்லை வா்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இருதரப்பு எல்லை வா்த்தகம் வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பா் வரை நடைபெறக் கூடியதாகும்.
அதற்கேற்ப, எல்லை அனுமதிச் சீட்டுகளை (பாஸ்) வழங்குவது, வெளிநாட்டு பண மாற்றத்துக்கான வங்கிகளை நிா்ணயிப்பது, சுங்கத்துறை மற்றும் தா்சுலா நகர நிா்வாகமும் இந்த வா்த்தகத்துக்கான விரிவான திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த எல்லை வா்த்தகத்தில், இந்தியவின் வெல்லம், புகையிலை, மசாலாப் பொருள்கள், பருப்பு வகைகள், காஃபி, சமையல் எண்ணெய், நெய் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படும். அதுபோல, சீனா தரப்பில் ஆடுகள், செம்மறி ஆட்டு தோல், வெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படும்.
தொடர்புடையது

பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் மேம்பாடு இந்தியா - தென்கொரியா முடிவு!

சீனாவின் விஷமத்தனம்...

24.3.1976: இந்தியா - இலங்கை கடல் எல்லை வரையறுப்பு உடன்பாடு கையொப்பம்

சீனாவின் 15-ஆவது ஐந்தாண்டு திட்டம்: இந்தியா எல்லை பிராந்தியங்களில் நெடுஞ்சாலையைப் பலப்படுத்த திட்டம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


