ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி, திடீரென ராஜிநாமா செய்துவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் மிகப் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவரும் இயக்குநருமான அதானு சக்ரவர்த்தி, திடீரென ராஜிநாமா செய்வதாகத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பொருளாதார விவகாரங்கள் துறை செயலரான அதானு சக்ரவர்த்தி, 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிக்குள் பல்வேறு தனிப்பட்ட நெறிமுறைகளுக்கு முரணான சில செயல்பாடுகளும் நடைமுறைகளும் நடைபெற்று வருவதாகவும், அவர் தனது ராஜிநாமா கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதானு சக்ரவர்த்தி பதவி விலகியுள்ள நிலையில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் புதிய தலைவராக கேக்கி மிஸ்ட்ரியை நியமிக்க மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வங்கியுள்ளது.
இதுகுறித்து ஹெச்டிஎப்சி வங்கி கூறுகையில், மார்ச் 18 ஆம் தேதி இந்திய நேரப்படி 3.17 மணிக்கு ராஜிநாமா கடிதம் தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது. அவரது பதவிக்காலத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
1985 ஆம் ஆண்டு பேட்ச் குஜராத் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அதானு சக்ரவர்த்தி, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொருளாதார விவகாரங்கள் துறை செயலராக இருந்து ஓய்வு பெற்றவர். அதற்கு முன்னதாக முதலீடு மற்றும் பொதுச் சொத்துகள் நிர்வாகத் துறையின் செயலராகவும் பணியாற்றினார்.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாகம் சாராத தலைவராக அதானு சக்ரவர்த்தியை மூன்றாண்டுகள் நீட்டிப்பதற்கு அதன் நிர்வாகக் குழு கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தது.
இவரின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி வரை உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன்னதாகவே அவர் பதவியை ராஜிநாமா செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Summary
Atanu Chakraborty on Wednesday resigned as non-executive chairman of HDFC Bank with immediate effect, citing concerns over "internal practices", in a development that could raise fresh questions over governance at a systemically important institution.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் இறக்குமதி: நாட்டின் பொருளாதார பலவீனம்! எச்டிஎஃப்சி

2 சதவீதத்திற்கும் மேல் சரிந்த எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள்!

எச்டிஎஃப்சி வங்கி தலைவா் திடீா் ராஜிநாமா

ரூ. 1 லட்சம் கோடி இழப்பு... ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் ராஜிநாமா எதிரொலி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


