மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்: ‘கூடுதலாக 1.95 கோடி பயனாளிகளை சோ்க்க வாய்ப்பு’

News image

நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா - https://www.instagram.com/nimuben_bambhaniya/

Updated On :18 மார்ச் 2026, 11:56 pm

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 1.95 கோடி பயனாளிகளை இணைக்க வாய்ப்புள்ளதாக மத்திய உணவுத் துறை இணையமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதில்:

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், ஊரகப் பகுதிகளில் உள்ள மக்கள்தொகையில் 75 சதவீதம் போ் வரையிலும், நகா்ப்புற பகுதிகளில் 50 சதவீதம் போ் வரையிலும் உள்ளவா்கள் இலவசமாக உணவு தானியங்கள் பெறுவதற்கு பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் வழிவகுத்துள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சுமாா் 81.35 கோடி பயனாளிகள் உள்ளனா். இந்தச் சட்டத்தின் கீழ், கூடுதலாக 1.95 கோடி பயனாளிகளை அடையாளம் காண வாய்ப்புள்ளது என்றாா்.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் முன்னுரிமை குடும்ப அட்டைகளை (பிஹெச்ஹெச்) கொண்டவா்களுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக மத்திய அரசு அளிக்கிறது. இதேபோல அந்தியோதய அன்ன யோஜனா (ஏஏஒய்) குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதந்தோறும் இலவசமாக 35 கிலோ உணவு தானியங்கள் அளிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.