மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வழிப்பறி வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

திருச்சி பொன்மலையில் இளைஞரிடம் வழிப்பறி செய்த ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:19 pm

திருச்சி பொன்மலையில் இளைஞரிடம் வழிப்பறி செய்த ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை பகுதியில் கடந்த மாா்ச் மாதம் கைப்பேசி செயலி வழியே ஓரினச் சோ்க்கைக்கு இளைஞா் ஒருவரை வரவழைத்து, தாக்கி, அவரிடமிருந்து 4.5 பவுன் நகைகள், பணம், கைப்பேசி உள்ளிட்டவற்றை திருச்சி அரியமங்கலம், காமராஜ் நகா் சௌகத் அலி தெருவைச் சோ்ந்த எஸ். அசாா் முகமது (26) உள்ளிட்ட சிலா் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, அசாா் முகமதுவை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் பொன்மலை போலீஸாரின் பரிந்துரையின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, கைதி அசாா் முகமதுவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை ஆணையிட்டாா்.