ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சுமார் 80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றி வந்த 'ஜக் லாட்கி' கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த சரக்கானது கடந்த மார்ச் 14 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்திலிருந்து ஏற்றப்பட்டது.
இந்தக் கப்பல், ஃபுஜைரா துறைமுகத்தில் இருந்தபோது எண்ணெய் முனையம் தாக்கப்பட்டாலும், கப்பலுக்கும் அதில் இருந்த இந்திய ஊழியர்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதியானது.
வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், 28 இந்திய சரக்கு கப்பல்களும் அப்பகுதியில் சிக்கின.
இந்த நிலையில், இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மோசமான சூழலை எட்டியது. இதனையடுத்து, மத்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒவ்வொரு கப்பலாக இந்தியா வந்தடைந்து கொண்டுள்ளது. ஏற்கெனவே, ஷிவாலிக், நந்தாதேவி ஆகிய இரண்டு கப்பல்களைத் தொடர்ந்து, மூன்றாவதாக, ஜக் லாட்கி கப்பல் குஜராத் வந்தடைந்துள்ளது.
மேலும், இதன்மூலம் இந்தியாவில் நிலவும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
The Indian-flagged ship 'Jak Ladki' carrying approximately 80,886 metric tons of crude oil has successfully arrived at the Indian port of Mundra in Gujarat today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த கப்பல் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டது

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜி!

45,000 மெட்ரிக் டன் எல்பிஜி! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



