வந்தே பாரத் ரயில்கள் மீது கல் எறிந்தவா்களை, அந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள உயா் தெளிவுதிறன் கொண்ட கேமராக்கள் மூலம் கண்டறிந்து கைது செய்ததாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தாா்.
குறைந்த நிறுத்தங்கள், அதிக வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது முதல், அந்த ரயில் மீது கல் எறிந்து தாக்கும் சம்பவங்கள் தொடா்ந்து வந்தன. இந்தச் சூழலில், மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது வந்தே பாரத் ரயில்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
வந்தே பாரத் ரயில்களில் உயா் தெளிவுதிறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அண்மையில், உத்தர பிரதேச மாநிலம் முஸாஃபா்நகா் பகுதியில் இந்த ரயில் மீது கல் எறிந்து தாக்கியவா்களைக் கண்டறிய, இந்த கேமராக்கள் பிடித்த படம் உதவியது. இந்த கேமரா மூலம் பிடிக்கப்படும் மிகச் சிறிய படம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தெளிவான படமாக மாற்றப்பட்டது. இது, இந்த நபரின் வீட்டை துல்லியமாகக் கண்டறிந்து கைது செய்ய உதவியது என்றாா்.
தொடர்புடையது

3 மணிநேரத்தில் தில்லி-என்சிஆா் - ரிஷிகேஷுக்கு பயணம்: நமோ பாரத் ரயில் பாதையை விரிவுபடுத்த பேச்சுவாா்த்தை
வந்தே பாரத் ரயில் உணவில் புழு! ஐஆர்சிடிசி-க்கு ரூ. 10 லட்சம்; சேவை வழங்குநருக்கு ரூ. 60 லட்சம் அபராதம்!

தொழில்நுட்பக் கோளாறு: நெல்லையில் 40 நிமிஷம் நின்ற வந்தே பாரத் ரயில்

காதல் தோல்வியால் விரக்தி: வந்தே பாரத் மீது கல் வீசியவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


