மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!

அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா செய்துள்ளது பற்றி....

News image

பாஜகவில் இணைந்த பிரத்யுத் போர்டோலாய் - X

Updated On :18 மார்ச் 2026, 7:34 am

அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலாய் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அசாம் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட அதிருப்தியால் பதவி விலகியுள்ள அவர், இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலாய் எழுதிய கடிதத்தில், மிகுந்த வருத்தத்துடன் இந்திய தேசிய காங்கிரஸின் அனைத்துப் பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேற்று இரவு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "என் வாழ்வின் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றை நான் கைவிட்டுவிட்டேன், அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்குள் குறிப்பாக அசாம் காங்கிரஸ் நிர்வாகிகள் பல விஷயங்களில் என்னை அவமதித்ததால்தான் இந்த முடிவை எடுத்தேன். காங்கிரஸ் தலைமைகூட என் மீது அனுதாபம் காட்டவில்லை. என் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸுடன் தொடர்புடையவனாக இருந்ததால் நான் இப்போது மிகவும் தனிமையாகிவிட்டேன். சமீப காலமாக, வாழ்வதற்கு நான் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறேன், அதனால் இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளது" என்று கூறியுள்ளார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் விவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அதிருப்தி காரணமாக அவர் ராஜிநாமா செய்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் பிரத்யுத் போர்டோலாயின் மகன் வரும் தேர்தலில் மார்கெரிட்டா தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பிரத்யுத் பாஜகவில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இன்று(மார்ச் 18) காலை அசாம் முதல்வர் ஹிமந்தபிஸ்வ சர்மா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

மக்களவையில் பிரத்யுத்-க்கு இன்னும் 3.5 ஆண்டுகள் காலம் பதவி இருந்த நிலையில் அவர் ராஜிநாமா செய்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 20 நாள்களுக்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா செய்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Summary

Congress MP Pradyut Bordoloi Resigns, Set To Join BJP Ahead Of Assam Polls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.