மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்து: இந்தியா - யூஏஇ தலைவர்கள் பேச்சு!

ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய இந்தியா - யூஏஇ இணைந்து செயல்பட முடிவு!

News image

ஹோர்முஸ் நீரிணை - AP

Updated On :17 மார்ச் 2026, 4:47 pm

ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (யூஏஇ) இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன. இன்று(மார்ச் 17) அமீரக அதிபர் எச். எச். ஷேக் முகமது பின் ஸாயெத் அல் நயனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அந்நாட்டு மக்களுக்கு அவர் ஈகைத் திருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியா - யூஏஇ இருநாட்டுத் தலைவர்களும் மேற்காசியாவின் இப்போதைய சூழல் குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூஏஇ மீதான அனைத்து தாக்குதல்களையும் அதனால் ஏற்பட்ட அப்பாவி மக்களின் உயிரிழப்புகளையும் பொதுச்சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களையும் இந்தியா வன்மையாகக் கண்டிப்பதை மீண்டுமொருமுறை யூஏஇ தலைமையிடம் பிரதமர் வலியுறுத்தினார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை இந்தியா - யூஏஇ ஆமோதித்தன.

நாங்கள் அப்பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைந்து திரும்பக் கொண்டுவர நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப். 28முதல் தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் படைகளின் எதிர்வினை ஆகியவற்றால் மேற்காசிய பிராந்தியத்தில் பெரும்பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை தற்காலிக மூடல் காரணமாக கடந்த இரு வாரங்களாக பாரசீக வளைகுடா பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் பல நாடுகளின் சரக்கு கப்பல்களும் ஸ்தம்பித்து நின்றன. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (யூஏஇ) இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன.

Summary

President of the UAE Prime Minister Narendra Modi discussed the current situation in West Asia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.