ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கடந்த ஐந்தாண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாக ஒருவர்கூட அரசுப் பணியில் அமர்த்தப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
வேலைவாய்ப்பு இயக்குநரகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜன. 14 வரை மொத்தம் 22,21,317 விண்ணப்பதாரர்கள் வேலை தேடி அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில் 13.08 லட்சம் ஆண்கள், 9.12 லட்சம் பென்கள். 989 பேர் இதர பிரிவினர்.
அவர்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் (ஓபிசி) சேர்ந்தவர்களே அதிகம். ராஜஸ்தானைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பவர்கள் அதிகம். அங்கு மொத்தம் 2.51 லட்சம் பேர் வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.
மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் தனியார்துறையிலும் குறைந்த எண்ணிக்கையிலே பணி நியமனம் நடைபெற்றுள்ளது.
கடந்த 2021-இல் 86 பேரும், 2022-இல் 825 பேரும், 2023-இல் மூன்றே பேரும், 2024-இல் 23 பேரும், கடந்தாண்டில் 71 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் இதர முன்னெடுப்புகள் வழியாக தனியார் துறையில் பணிகளில் சேர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
No govt job through unemployment offices in 5 years in Rajasthan; 22 lakh candidates registered: RTI
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூா்: ஐந்து தொகுதிகளில் 1,427 வாக்குச்சாவடிகள் தயாா்; தோ்தல் பணியில் 10,160 போ்

வேலூா்: தோ்தல் பாதுகாப்பு பணியில் 1,938 போ்

கொலை வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறை

பெரம்பலூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


