மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொழில்நுட்பக் கோளாறு: அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

News image

ஏர் இந்தியா(கோப்புப்படம்) - ANI

Updated On :16 மார்ச் 2026, 8:31 am

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து சுமார் 300 பேருடன் நேற்று தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சந்தேகிக்கப்படும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் அயர்லாந்தில் உள்ள ஷானனுக்குத் திருப்பி விடப்பட்டது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஷானன் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

பாதுகாப்பு நெறிமுறைகளின்படி விமானம் தற்போது விரிவான தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். பிளைட் ரேடார் 24 இணையதளத் தகவலின்படி, திருப்பி விடப்படுவதற்கு முன்பு விமானம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் வானில் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

An Air India A350 aircraft from New York to Delhi was diverted to Shannon in Ireland due to a suspected technical snag on Monday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.