ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக விமானிகளின் பணிநேரத்தை தற்காலிகமாக நீட்டிக்க ஏர் இந்தியா நிறுவனம் பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (டிஜிசிஏ) அவகாசம் கேட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக சில முக்கிய வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே, வழக்கமாகச் செல்லும் பாதையை மாற்றி பிற பாதைகளில் விமானங்கள் இயக்கப்படுவதால் நேரம் அதிகமாக விரையமாகிறது.
ஆகவே, சர்வதேச விமானிகளுக்கு விமானப் பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகளில் (FDTL) இருந்து தற்காலிக விலக்கு அளிக்குமாறு, விமான ஒழுங்குமுறை ஆணையமான பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (டிஜிசிஏ) ஏர் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகளின் (FDTL) கீழ், விமானிகளுக்கு வாரத்திற்கு 48 மணிநேரம் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். இது முந்தைய 36 மணிநேரத்துடன் ஒப்பிடும்போது, "இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச விமானிகளுக்கு பகல் நேரத்தில் அதிகபட்சமாக 13 மணிநேரமும் இரவு நேரத்தில் 10 மணிநேரமும் பணி நேரம் அனுமதிக்கப்படுகிறது" என்று மூத்த விமானி ஒருவர் கூறினார்.
இந்தப் போர்ச்சூழல் தணியும் வரை மட்டுமே விலக்கு அளிக்குமாறு கேட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு முதல் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதாலும், இப்போது ஈரானிய வான்வெளி மூடப்பட்டதாலுமே இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பொது விமான போக்குவரத்து ஆணையம் (டிஜிசிஏ) எந்தவித பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Air India has requested the DGCA to temporarily extend the working hours of its pilots due to the Iran-Israel-US war.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!
ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!
போர் நிறுத்தம் பற்றி பேசிக்கொண்டே தாக்குதலுக்குத் திட்டமிடும் அமெரிக்கா: ஈரான்

தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானத்தால் பயணிகள் அவதி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



