மகாராஷ்டிரத்தின் பாராமதி தொகுதியில் துணை முதல்வரும் என்சிபி தலைவருமான சுநேத்ரா பவாருக்கு எதிராகத் தனது கட்சி வேட்பாளரை நிறுத்தாது என என்சிபி (எஸ்பி)யின் செயல் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்தார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரியா சுலே கூறுகையில்,
துணை முதல்வராக இருந்த அஜீத் பவார் மற்றும் பாஜக எம்எல்ஏ சிவாஜி கார்டிலே ஆகியோரின் மறைவால் காலியான, புணேவின் பாராமதி மற்றும் அகிலயநகரின் ரஹுரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஏப்ரல் 23 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சுநேத்ரா பவார், பாராமதி தொகுதியிலிருந்து இடைத்தேர்தலுக்குப் போட்டியிட வாய்ப்புள்ளது. பாராமதி இடைத்தேர்தலில் என்சிபி(எஸ்பி) போட்டியிடாது என்பதை நான் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன். சுநேத்ராவுக்கு எதிராக நாங்கள் எங்கள் வேட்பாளரை நிறுத்தமாட்டோம்.
ரஹுரி தொகுதியைப் பொறுத்தவரை (எதிர்க்கட்சியான) மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சிகள் அத்தொகுதி குறித்து ஆலோசனை நடத்தும். அடுத்த ஓரிரு நாள்களில் இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
2024 பொதுத் தேர்தல்களில்,என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே, தனது உறவுமுறைச் சகோதரரான அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவாரை (தோற்கடித்து, பாராமதி மக்களவைத் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார். பின்னர், சுநேத்ரா பவார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Summary
NCP (SP) working president Supriya Sule on Monday said her party will not field a candidate against Deputy Chief Minister and NCP leader Sunetra Pawar in the upcoming Baramati assembly bypoll.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்

பாராமதி இடைத்தோ்தல்: சுநேத்ரா பவாரை எதிா்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அறிவிப்பு

பாராமதி இடைத்தேர்தல்: ஏப்ரல் 6இல் சுநேத்ரா பவார் வேட்பு மனு தாக்கல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



