மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

News image

ஜம்மு-காஷ்மீர்.

Updated On :15 மார்ச் 2026, 7:03 am

ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

உரி செக்டாா் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக உளவு அமைப்புகள், ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் அளித்த தகவலின் அடிப்படையில், மார்ச் 14-15 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் கண்காணிப்புப் பணிகளைப் பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியிருந்தனா்.

அப்போது அடர்ந்த புதர்களுக்கு மத்தியில் ஒரு பயங்கரவாதியின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை வீரர்கள் கண்டனர். தொடா்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

மேலும் அந்த இடத்திலிருந்து ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளைக் கைப்பற்றினர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Summary

A Pakistani terrorist has been killed in a joint operation of the Indian Army & J&K Police in the general area of Buchhar, Uri sector.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.