ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தால் 2026 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராஜீவ் சுக்லா கூறுகையில், “தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணியளவில் தேர்தல் தேதிகளை அறிவிக்க இருப்பதாகத் தெரிகின்றது. அப்படி அவர்கள் தேர்தல் தேதிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையை விரைவில் வெளியிட ஏதுவாக இருக்கும்.
மேலும், கடுமையான போட்டி நிலவும் ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. எங்கள் கட்சியான காங்கிரஸ் வெற்றி பெறும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக பிசிசிஐ நடத்தும் 2026 ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகளுக்கான அட்டவணை கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12 வரை நடக்கவுள்ள 20 போட்டிகளுக்கான முதற்கட்ட அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், விரைவில் ஐபிஎல் தொடரின் முழுப்போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்ற இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Congress MP and BCCI vice-president Rajiv Shukla has said that the full schedule of the 2026 IPL will be released soon if the Election Commission announces the election dates this evening.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி பந்துவீச்சு: முதல் வெற்றிக்கான தேடலில் குஜராத்!

க்ளாசன், நிதீஷ் அரைசதம்: லக்னௌ அணிக்கு 157 ரன்கள் இலக்கு!
முதல்வர் ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயண அட்டவணை!
2026 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


