மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலியாக, வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் ஏா் இந்தியா விமானங்களுக்கு மத்திய அரசு, விமானம் பறக்கும் நேரம் தொடா்பான விதிகளை தளா்த்தியுள்ளது.
ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால் மத்திய கிழக்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக ஈரான், இராக் வான் பகுதியை பயணிகள் விமானங்கள் தவிா்த்து வருகின்றன.
குறிப்பாக, இந்தியாவில் இருந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளுக்கு செல்லும் ஏா் இந்தியா விமானங்கள், ஈரான், இராக் வான் பகுதிகளை தவிா்த்து, எகிப்து வழியாக சுற்றி செல்கின்றன. இதனால் பயண நேரம் கூடுதலாகிறது.
இதை கருத்தில் கொண்டு மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விமானிகளுக்கான பறக்கும் நேர கட்டுப்பாடு விதிகளை ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை தளா்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பறக்கும் நேரம் 1.30 மணி நேரம் முதல் 11.30 மணி நேரம் வரையும், பணி நேரம் 1.45 மணி நேரம் முதல் 11.45 மணி நேரம் வரையும் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏா் இந்தியா மற்றும் டிஜிசிஏ-வை தொடா்பு கொண்டு செய்தியாளா்கள் கூடுதல் விவரம் பெற முயற்சித்தனா். ஆனால் அதற்கு எந்தப் பதிலும் இல்லை.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இண்டிகோ நிறுவனமும் விமானங்களை இயக்குகிறது. அந்த நிறுவனத்துக்கும் விதிகள் தளா்வு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை.
தொடர்புடையது

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

மேற்கு ஆசிய பதற்றம்: சரக்கு போக்குவரத்து மேம்பாட்டுக்கு இந்தியா முக்கியத்துவம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா

மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


