லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காங்கிரஸ் ஊடுருவலை இயல்பாக்கியது, பாஜக அனுமதிக்காது : அமித் ஷா

நாட்டில் ஊடுருவல்களை காங்கிரஸ் கட்சி இயல்பாக்கியதாகவும், ஆனால் பாஜக இதனை ஒருபோதும் அனுமதிக்காது என அமித் ஷா பேசியது குறித்து..

News image

அமித் ஷா - படம் - பிடிஐ

Updated On :15 மார்ச் 2026, 10:07 am

நாட்டில் ஊடுருவல்களை காங்கிரஸ் கட்சி இயல்பாக்கியதாகவும், ஆனால் பாஜக இதனை ஒருபோதும் அனுமதிக்காது என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்) மூலம் நாட்டில் உள்ள ஊடுருவல்காரர்கள் விரைவில் விரட்டியடிப்பார்கள் என்றும் எஸ்.ஐ.ஆரின் முக்கிய நோக்கமே அவர்களை அதிகாரமிழக்கச் செய்வதுதான் எனவும் குறிப்பிட்டார்.

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பாரதிய ஜன மோர்ச்சா எனப்படும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் போராட்டங்கள் மற்றும் வன்முறை நிறைந்த மாநிலமாக அஸ்ஸாம் இருந்தது. ஆனால், போராட்டங்களில் ஈடுபட்டுவந்த அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி உள்ளிட்ட இயக்கங்களுடன் பாஜக அரசு ஒப்பந்தம் செய்தது. அதாவது, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டு பாஜக அரசு செயல்பட்டது.

அஸ்ஸாமில் பாஜகவுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுங்கள். மாநிலத்தில் உள்ள ஊடுருவல்காரர்கள் முற்றிலும் வெளியேற்றப்படுவார்கள். ஊடுருவல்களை காங்கிரஸ் கட்சி இயல்பாக்குகிறது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை.

ஊடுருவலை அனுமதிப்பதன் மூலம் ஊழலையும் பிரிவினைவாதத்தையும் காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கிறது. ஆனால், வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பணிகள் தொடர மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என அமித் ஷா பேசினார்.

Summary

Congress believes in corruption but BJPs focus is on development: Amit Shah in Guwahati

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.