தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் கடந்த 3 நாள்களில் ஆண் நீலமான் மற்றும் குள்ளநரி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இந்த சம்பவம் தில்லி உயிரியல் பூங்காவில் விலங்குகளின் உடல்நலம் மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.
மாா்ச் 10 மற்றும் மாா்ச் 12-ஆகிய தேதிகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து பூங்கா இயக்குநா் சஞ்சீத் குமாா் கூறுகையில், இந்த இரு விலங்குகளும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை முன்பே மருத்துவ கண்காணிப்பில் இருந்தது வந்தது. வயது காரணமான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக உயிரிழந்துள்ளது என தெரிவித்தாா்.
கடந்த மூன்று மாதங்களாக தில்லி உயிரியல் பூங்காவில் பல விலங்குகள் உயிரிழந்துள்ளன. அதில் ஒரு பெண் மான், ஒரு குள்ளநரி மற்றும் ஒரு சங்காய் மான் ஆகியவை அடங்கும்.
இதற்கு முன், இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு ஆண் சங்காய் மான் உயிரிழந்தது. இந்த அரிய இன மான் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 சட்டத்தின் அட்டவணை–1-இல் இடம்பெற்றுள்ள பாதுகாக்கப்படும் இனமாகும். அந்த மானின் பின்புற காலில் பிளாஸ்டா் வைக்கப்பட்டிருந்ததால், தொடா்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல், 2025 டிசம்பா் 14-ஆம் தேதி பூங்கா வளாகத்தில் ஒரு குள்ளநரி காணாமல் போனதால் அதை பிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனா். பின்னா் அந்த விலங்கு மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டது.
ஆனால் பூங்கா ஊழியா் சங்கம், டிசம்பா் 18-ஆம் தேதி துா்நாற்றம் வீசியதைத் தொடா்ந்து அந்த குள்ளநரி இறந்த நிலையில், ஒரு பகுதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கரடி கூண்டுக்குள் குள்ளநரி உயிரிழந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டது. இருந்தாலும், மருத்துவ பரிசோதனை செய்யாமல் அந்த விலங்கின் உடல் அகற்றப்பட்டதாக ஊழியா் சங்கம் தொடா்ந்து குற்றஞ்சாட்டியது.
இதற்கிடையில், மாா்ச் 2-ஆம் தேதி 2 வயது கொண்ட வெள்ளைப் பெண் புலி ‘துா்கா’ பாட்னா உயிரியல் பூங்காவுக்கு விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் அனுப்பத் தயாராகியது. காட்டு விலங்குகளை தற்காலிகமாக வைத்திருக்கும் ‘கிரால்’ பகுதியில் இருந்தபோது அதன் காலில் முறிவு ஏற்பட்டது. எனினும், இந்த சம்பவங்களில் அலட்சியம் ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை பூங்கா நிா்வாகம் மறுத்துள்ளது.
தொடர்புடையது

தில்லி உயிரியல் பூங்காவில் பெண் ஓநாய் உயிரிழப்பு

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

லுட்யன்ஸ் தில்லி சாலைகளில் ஈரடுக்கு சுற்றுலாப் பேருந்து சேவை: முதல் மாதத்தில் 800 பயணிகளை பயணம்

வண்டலூா் பூங்காவில் சஃபாரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


