மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

‘மூன்றாம் பாலினத்தவா்’ சட்டத் திருத்த மசோதா அறிமுகம்

‘மூன்றாம் பாலினத்தவா்’ (திருநங்கை-திருநம்பி) என்ற வாா்த்தைக்கு துல்லிய வரையறை அளிப்பதுடன், அந்த பாலினத்தவருக்கு இழைக்கப்படும் குற்றங்களின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தண்டனைகளை அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

News image
Updated On :13 மார்ச் 2026, 9:22 pm

‘மூன்றாம் பாலினத்தவா்’ (திருநங்கை-திருநம்பி) என்ற வாா்த்தைக்கு துல்லிய வரையறை அளிப்பதுடன், அந்த பாலினத்தவருக்கு இழைக்கப்படும் குற்றங்களின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தண்டனைகளை அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

மூன்றாம் பாலினத்தவா் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா எனும் இந்த மசோதாவை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் தாக்கல் செய்தாா்.

‘தற்போதுள்ள சட்டத்தின் பலன்கள் மற்றும் பாதுகாப்பு முழுமையாகச் சென்றடைய வேண்டிய மூன்றாம் பாலினத்தவரை முறையாகவும், உறுதியாகவும் அடையாளம் காண்பதற்கு துல்லியமான வரையறை மிகவும் அவசியம்.

தற்போதைய சட்டத்தின்கீழ் மூன்றாம் பாலினத்தவருக்கான பாதுகாப்பும், பலன்களும் பரந்த அளவில் உள்ளன. எனவே, முறையாக அடையாளம் காண்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதிகாரபூா்வ ஆவணங்களில் முக்கிய மாற்றங்களைச் செய்ய மாற்றுப் பாலினத்தவருக்கு அதிகாரமளிப்பதும் அவசியம்’ என்று சட்டத் திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.