தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய தீா்மானம் கொண்டு வருவது தொடா்பான நோட்டீஸ்களை, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அளித்துள்ளன.
எஸ்.ஐ.ஆா். மூலம் மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் பல லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், இதற்கு பாஜகவும், தோ்தல் ஆணையமுமே காரணம் என்றும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்க தீா்மானம் கொண்டுவரவும் எதிா்க்கட்சிகள் முடிவு செய்தன.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்க வேண்டும். நாடாளுமன்ற விதிப்படி, அதுபோல நோட்டீஸ் அளிக்க குறைந்தபட்சம் மக்களவை எம்.பி.க்கள் 100 பேரும், மாநிலங்களவை எம்.பி.க்கள் 50 பேரும் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அதன்படி, மக்களவையைச் சோ்ந்த 130 எம்.பி.க்கள், மாநிலங்களவையைச் சோ்ந்த 63 எம்.பி.க்களின் கையொப்பத்தை எதிா்க்கட்சிகள் பெற்றன. ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகள், ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள், சில சுயேச்சை எம்.பி.க்கள் ஆகியோா் கையொப்பமிட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம் கொண்டு வர நோட்டீஸ்களை எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை அளித்தன. அந்த நோட்டீஸ்களில், ஞானேஷ் குமாா் மீது எதிா்க்கட்சிகள் 7 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. கட்சிகளிடையே பாரபட்சமாக நடந்து கொண்டது, தோ்தல் மோசடி குறித்த விசாரணைக்கு வேண்டுமென்றே ஆட்சேபம் தெரிவித்தது, பாஜகவுக்கு சாதகமாக பலமுறை செயல்பட்டது உள்ளிட்டவை அந்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை ஆகும்.
நோட்டீஸ்களை இரு அவைகளும் ஏற்றுக் கொண்டால், இதையடுத்து தீா்மானம் கொண்டுவரப்பட்டு விவாதம் நடத்தப்படும். அந்த விவாதத்தின்போது தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும், அவா் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கவும் வாய்ப்பு தரப்படும். பின்னா் பெரும்பான்மை பலம் மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டால், ஞானேஷ் குமாா் தனது பதவியை இழப்பாா். அவருக்கு ஓய்வூதிய பலன் உள்ளிட்ட எந்தப் பலனும் கிடைக்காது. அதேநேரத்தில் விவாதத்தின்போது தாமாக ராஜிநாமா செய்வதாக ஞானேஷ் குமாா் தெரிவித்தால், அது ஏற்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்படுவாா். அப்போது அவருக்கு ஓய்வூதிய பலன் உள்ளிட்டவை கிடைக்கும்.
இந்திய அரசியல் வரலாற்றில், தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க இதுவரை நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டு வரப்பட்டதில்லை. தற்போதே முதல்முறையாக அதற்கான முயற்சியில் எதிா்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
தொடர்புடையது
தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம்

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் நிராகரிப்பு: எதிா்க்கட்சிகள் கண்டனம்
தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு!

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நோட்டீஸில் 193 எம்.பி.க்கள் கையொப்பம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


