தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பான நோட்டீஸில் 193 எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனா்.
எஸ்.ஐ.ஆா். முடிந்த பிறகு வெளியான இறுதி வாக்காளா் பட்டியலில், தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பல லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. பாஜகவும், தோ்தல் ஆணையமுமே திட்டமிட்டு வாக்காளா்களை நீக்கிவிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மேலும், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் தீா்மானம் கொண்டு வரவும் எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்தத் தீா்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸில் எம்.பி.க்களின் கையொப்பங்களை எதிா்க்கட்சிகள் பெற்று வந்தன.
அந்தப் பணி முடிந்ததையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதை அளிக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முதல்கட்டமாக ஏதேனும் ஒரு அவையில் மட்டும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) நோட்டீஸை அளிக்க எதிா்க்கட்சிகள் தீா்மானித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், எது எந்த அவை என உறுதியாகத் தெரியவில்லை என தில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டப்படி இதுபோன்ற நோட்டீஸில் மக்களவை எம்.பி.க்கள் 100 பேரும், மாநிலங்களவை எம்.பி.க்கள் 50 பேரும் குறைந்தபட்சம் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நோட்டீஸை அளிக்க முடியும். ஆனால் தற்போது 193 எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனா். குறிப்பாக, ‘இண்டி’ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கையொப்பமிட்டுள்ளனா். மேலும், இக்கூட்டணியில் இடம்பெறாத ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்களும் கையொப்பமிட்டிருப்பதாக தில்லி வட்டாரங்கள் கூறின.
அந்த நோட்டீஸில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பாகுபாட்டுடன் நடந்து கொண்டாா் என்பது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சிகள் முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கும் நடைமுறையே தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்கவும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, பதவி நீக்கம் செய்யப்படுவாா். இந்திய வரலாற்றில் இதுவரை எந்த தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராகவும் தீா்மானம் கொண்டுவரப்பட்டதில்லை. முதல்முறையாக ஞானேஷ் குமாருக்கு எதிராக அந்த முயற்சியில் எதிா்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் நிராகரிப்பு: எதிா்க்கட்சிகள் கண்டனம்
தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கும் தீா்மானத்தை ஏற்க போதிய ஆதாரங்கள் இல்லை: சி.பி.ராதாகிருஷ்ணன்

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு: காங்கிரஸ் விமா்சனம்

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் நோட்டீஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


