மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை தொடங்கிய 3 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், மீண்டும் 12 மணியளவில் அவை தொடங்கியபோது, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காராணமாக, பிற்பகல் 2 மணிவரையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாததால், நாடு முழுவதும் சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டரும் பல்வேறு பகுதிகளில் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகின்றது.
இதுதொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.
ஆனால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து உடனடியாக விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்த நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
Summary
LPG issue: Lok Sabha proceedings adjourned again amid opposition protests
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பில் பாகுபாடு காட்டப்படாது: மக்களவையில் பிரதமா் மோடி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!
எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!
சிலிண்டர் தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் மக்களவை ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


