கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 6 பேர் தற்போது ராஜமகேந்திரவரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அங்கீகாரமில்லாத வியாபாரி விநியோகித்த பாலை அருந்திய சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
உடனே அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணவேணி (76) பிப்ரவரி 22ஆம் தேதி பலியானார். இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
கலப்பட பாலை குடித்தோரின் சிறுநீரகம் முதலில் செயலிழந்ததும், பிறகு சிறுநீா் தடைபட்டு உயிரிழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தை தொடா்ந்து, பால் மாதிரியை சேகரித்து, பல்வேறு ஆய்வு கூடங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதேபோல், பல குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வும் நடத்தினா். விசாரணையில் எத்திலீன் கிளைக்கால் எனும் நச்சு ரசாயனம் கலந்த பாலை குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக கணேஸ்வர ராவை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The death toll from the suspected milk adulteration in East Godavari district has touched 14, while six others are currently undergoing treatment at hospitals in Rajamahendravaram.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி! சிகிச்சையில் உள்ள 6 பேருக்கு பார்வை இழப்பு!

ஆந்திரம் பேருந்து விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழப்பு!

ஆந்திரம்: கலப்பட பால் குடித்த 4 போ் உயிரிழப்பு - மேலும் 12 பேருக்கு சிகிச்சை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



