நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என்ற செய்தி உண்மையல்ல என்று எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளன.
மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவுள்ளதாகவும் புரளிகள் கிளம்பியது.
இதன்காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் நேற்று இரவுமுதல் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பெட்ரோல் நிரப்ப வரிசையில் காத்திருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பெட்ரோல் நிறுவனங்கள் வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளன.
பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது, விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
There is no shortage of petrol and diesel! Oil companies explain
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் அதிர்ச்சி தருமா? அதுவும் ரூ.18, ரூ.35 வரை!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!

பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து!

நாட்டில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



