வணிக சிலிண்டர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குப் பதில் பிரதமர் மோடி பேரணிகளில் மும்முரத்துடன் ஈடுபட்டு வருவதாக சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் விமர்சித்தார்.
தேசிய தலைநகரில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத் கூறுகையில்,
கேரளம், தமிழ்நாடு என மாறிமாறி பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாட்டில் என்ன நிலைமை என்றே அவருக்கு புரியவில்லை. மேற்கு ஆசிய மோதலின் தாக்கம் இந்தியாவின் எரிசக்தி குறித்து அவர் விவாதிக்கவில்லை.
அவர் தனது எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் வார்த்தைகள் பிரதமர் பதவியின் அந்தஸ்துக்குப் பொருந்தாது. ஈரான் - இஸ்ரேல் மோதலின் தாக்கம் குறித்து நீங்கள் விவாதிக்கவில்லை, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை பற்றி மௌனமாக இருப்பது ஏன்?
நாட்டில் நிலவும் இந்த சூழல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, பெங்களூர், மும்பை, ஏன் சென்னை உள்பட சிறியது முதல் பெரியது வரையிலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மோடி அரசு இதுகுறித்து எதுவும் கூறவில்லை. நாடு அத்தகைய நிலைமையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
கேரளம் மற்றும் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் பொதுக்கூட்டங்களை நடத்துவதில் பரபரப்பாகவும், மும்முரமாகவும் இருந்து வருகிறார். இவ்வாறு சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
Summary
Shiv Sena (UBT) MP Sanjay Raut on Thursday criticised Prime Minister Narendra Modi for holding rallies in Kerala and Tamil Nadu, asking him to address the reported shortage of commercial LPG cylinders.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!

தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



