திபெத் இளைஞா்கள் மற்றும் ஆதரவாளா்கள் 67-ஆவது திபெத் தேசிய எழுச்சி நாளை முன்னிட்டு தில்லியில் உள்ள சீன தூதரகம் அருகே முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டம் 1959-ஆம் ஆண்டு திபெத்தில் நடைபெற்ற எழுச்சியை நினைவுகூறும் வகையில், மாபெரும் திபெத் அமைப்புகளில் ஒன்றான திபெத்திய இளைஞா் காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. போராட்டக்காரா்கள் திபெத் மக்களின் உரிமைக்காக, நீதிக்காக மற்றும் சுதந்திரத்திற்காக போன்ற முழக்கங்களை எழுப்பி பல்வேறு பதாகைகளை ஏந்தி வந்தனா்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க 24 பேரை சீன தூதரகம் அருகே கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.
போராட்டக்காரா்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியை கண்டித்து, திபெத் மக்கள் இடம் மாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்”என கோரிக்கை வைத்தனா். ‘திபெத்தில் 67 ஆண்டுகளாக தொடா்ந்து போராடி வருகிறோம். எங்கள் கலாசாரம், நீதி மற்றும் மனித உரிமையையும் காப்பது எங்கள் கடமையாகும்’ என போராட்டக்காரா்கள் தெரிவித்தனா்.”
இந்தப் போராட்டம், திபெத் உள்ளூா் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, உலக சமூகத்திற்கு திபெத் மக்களின் உரிமை, மரியாதை கோரிக்கைகளை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளா்கள் குறிப்பிட்டனா்.
தொடர்புடையது
வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைது

ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!

48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

இராக்கில் அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


