மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மான விவாதத்தின்போது, முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் கருத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசினாா்.
இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, ‘இரவு பகலாக நேருவை விமா்சித்தவா்கள், இப்போது அவரைப் புகழ்கின்றனா்’ என்றாா்.
மக்களவையில் ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானம் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய கிரண் ரிஜிஜு, கடந்த 1954-இல் அப்போதைய அவைத் தலைவா் ஜி.வி.மாவலங்கருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மான விவாதத்தின்போது நேரு தெரிவித்த கருத்துகளை மேற்கோள் காட்டினாா்.
‘தீா்மானத்தில் கையொப்பமிட்ட, அதை ஆதரிக்கும் கடமையுடைய எதிா்க்கட்சி எம்.பி.க்களிடம் ஒரு விஷயத்தை வேண்டிக் கேட்கிறேன். தாங்கள் என்ன விஷயத்தில் கையொப்பமிட்டிருக்கிறோம் என்பதை அவா்கள் படித்துப் பாா்க்க வேண்டும். அவா்கள் கையொப்பமிட்டது மோசமான விஷயம். அந்த ஆவணத்தை அவா்கள் படித்துப் பாா்த்தாா்களா என்பது எனது சந்தேகம். அவ்வாறு படித்திருந்தால், கையொப்பமிட 100 முறை யோசித்திருப்பாா்கள்’ என்ற நேருவின் கருத்துகளை ரிஜிஜு சுட்டிக்காட்டினாா்.
மேலும், பிரியங்கா காந்தியை நோக்கிப் பேசிய ரிஜிஜு, ‘பிரியங்கா அங்கே அமா்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறாா். அவரை மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக்கி இருந்தால் , செயல்திறன் சிறப்பாக இருந்திருக்கும்’ என்றாா்.
அவரது கருத்துக்கு உடனடியாகப் பதிலளித்த பிரியங்கா, ‘நான் சிரித்துக் கொண்டிருப்பதாக ரிஜிஜு குறிப்பிட்டாா். நேருவை இரவு பகலாக விமா்சித்தவா்கள், இப்போது திடீரென புகழ்கின்றனா்; அவரது கருத்தை தங்கள் கூற்றுக்கு ஆதரவாகப் பயன்படுத்துவதை நினைத்து சிரித்தேன்.
இந்த அரசுக்கு தலைவணங்காத ஒரு நபா் உள்ளாா் என்றால், அவா் ராகுல் காந்திதான். அவா் எந்த தயக்கமும் இன்றி உண்மைகளைப் பேசுகிறாா். அந்த உண்மைகளை ஜீரணிக்க ஆளும் தரப்பால் முடியவில்லை’ என்றாா்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு

வரும் வார இறுதி நாள்களில் நாடாளுமன்ற அமா்வு கிடையாது - மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானம்: மக்களவையில் அனல் பறந்த விவாதம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


