தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ்

எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது

News image
Updated On :10 மார்ச் 2026, 5:12 pm

எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியாக எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் இன்று(மார்ச் 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசிய எரிபொருள்களின் தடையில்லா விநியோகத்தை உறுதிசெய்ய ரிலையன்ஸ் நிறுவனம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கிறது.

அதன்படி, எங்களுடைய சுத்திகரிப்பு நிலையங்களில் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம். முக்கியமாக, ஜாம்நகரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மையத்திலும் எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். எங்களது குழுக்கள் இதற்காக முழுவீச்சில் உழைத்து வருகிறது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பும் லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களின் நலனுமே ரிலையன்ஸுக்கு முதன்மையாக இருப்பவை. அரசுடன் நெருக்கமாக தொடர்ந்து பணியாற்றி, தேச வழிகாட்டல்களின்படி செயல்படுகிறோம்.

நாட்டுக்குத் தேவைப்படும்போது ரிலையன்ஸ் உறுதியாக துணை நிற்கும். உலகளாவிய நிலைத்தன்மையற்ற தருணத்தில், நாங்கள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு ஆதரவு தர அனைத்து விதத்திலும் கடமையாற்ற உறுதியாக இருக்கிறோம். அதன்மூலம், நாட்டுக்கு அத்தியாவசிய எரிபொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Reliance Industries is taking proactive steps and in line with the Government guidelines, to maximize LPG production

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.