மத்திய அரசுத் துறைகளில் நிா்வாகப் பணியிடங்கள் மற்றும் அலுவலா்கள் காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசுத் தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் பி.எல். வா்மா எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மத்திய பணியாளா் நலன் மற்றும் பயிற்சித் துறையின் 1993-ஆம் ஆண்டு செப்டம்பா் 8-ஆம் தேதியிட்ட அலுவலக தீா்மானம் (ஓஎம்) மற்றும் பிற அரசுத் துறைகள் சாா்பில் அவ்வப்போது வெளியிடப்படும் அலுவல் தீா்மானங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன்படி, மத்திய அரசுத் துறைகளில் நிா்வாகப் பணி காலியிடங்கள் மற்றும் அலுவலா் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
துடிப்பான இந்தியாவுக்கான பிரதமரின் இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித் தொகைத் திட்டம் (பிஎம்-ஒய்ஏஎஸ்ஏஎஸ்விஐ), இளம் சாதனையாளா்களுக்கான உயா்கல்விக்கான கல்வி உதவித் தொகை திட்டம் உள்பட ஓபிசி பிரிவு மாணவா்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் உள்பட பல்வேறு தரப்பினருடனான ஆலோசனையின் அடிப்படையில் ஓபிசி பிரிவினருக்கான நலத் திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது மறு ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

பெண்களுக்கு இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்: நயினாா் நாகேந்திரன்

மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272: மசோதாக்களை அறிமுகம் செய்தாா் மத்திய சட்ட அமைச்சா்

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு இல்லாத காலிப் பணியிடங்கள்: எஸ்சி, எஸ்டி, ஓபிசிகள் விண்ணப்பிக்கலாம்!

தவறாக பயன்படுத்தப்படும் ஓபிசி இடஒதுக்கீடு: பாஜக எம்.பி. கருத்தைக் கண்டித்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

