2025 - 2026 ஆம் கல்வியாண்டில் மட்டும் நாடு முழுவதும் 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதாக, மாநிலங்களவையில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2025 - 2026 கல்வியாண்டில் மட்டும் 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக, செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) மாநிலங்களவையில், மத்திய சுகாதார இணையமைச்சர் அனுபிரியா படேல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் எழுத்துப்பூர்வமாக வெளியிட்டுள்ள பதிலில்,
“தேசிய மருத்துவ ஆணையம் அளித்த தகவலின்படி, ஒரே கல்வியாண்டில் 11,682 இளநிலை மருத்தவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களுக்கும், 8,967 முதுநிலைப் பட்டங்களுக்கான இடங்களுக்கும் (எய்ம்ஸ் உள்பட) மத்திய அரசு அனுமதியளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதுமுள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களிடம் இருந்து புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை தேசிய மருத்துவ ஆணையம் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, நாடு முழுவதும் கல்லூரி வசதி இல்லாத பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைத்து மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கும் மத்திய அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தத் திட்டத்தின் மூலம், இதுவரை ரூ. 41,332 கோடி செலவில், 3 கட்டங்களாக 157 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
43 new medical colleges established across the country in the academic year 2025-2026 alone.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்வு!

திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

ஓராண்டில் 3,405 பெட்டிகளை தயாரித்து ஐசிஎஃப் சாதனை

எம்பிபிஎஸ் தோ்வுகள்: படித் தொகையை உயா்த்தக் கோரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



