லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

டிஜிட்டல் கைது: ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ரூ. 1 கோடி மோசடி!

டிஜிட்டல் கைது மோசடியில் ரூ. 1 கோடிக்கும் மேல் பணத்தை இழந்த ஓய்வுபெற்ற நீதிபதி.

News image

டிஜிட்டல் மோசடி - Dinamani

Updated On :9 மார்ச் 2026, 9:16 am

ஹைதராபாத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியால் பாதிக்கப்பட்டு ரூ. 1 கோடிக்கும் மேல் பணத்தை இழந்துள்ளார்.

ஹைதராபாத் நகரின் மல்காஜ்கிரி பகுதியில் வசித்துவந்த 69 வயதான ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை இணைய மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் கடந்த வாரம் தொடர்பு கொண்டனர்.

அவரது தொலைபேசி எண் பெண்கள் கடத்தல் மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் உள்ளதாகக் கூறி அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால், தன்னிடம் இருந்த ரூ. 1 கோடிக்கும் மேலான தொகையை அவர் இணைய குற்றவாளிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்ட அவர், 3 நாள்களுக்கு முன்பு அங்குள்ள காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதியே இதுபோன்ற மிரட்டலுக்கு பயந்து பணத்தை பறிகொடுத்தது பற்றிய கேள்விக்கு, “இதுபோன்ற மோசடிகளில் குற்றவாளிகள் தங்களை சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி மிரட்டுகின்றனர். மேலும், போலியான குற்றச்சாட்டுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி பணம் கேட்டு அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால், பாதிக்கப்படுபவர்கள் பயத்தின் காரணமாக பணத்தை இழக்கின்றனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Retired judge loses over Rs 1 crore in digital arrest scam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.