தில்லி-கோவா விமானத்தில் பீடி புகைத்ததாக பயணி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவர் தலைநகர் தில்லியிலிருந்து கோவாவிற்கு ஆகாசா ஏர் விமானத்தில் சனிக்கிழமை பயணித்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிறுவனத்தின் புகாரின்படி, பயணி விமானக் கழிப்பறைக்குள் 'பீடி' புகைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அவர் ஒரு லைட்டரை வைத்திருந்ததாகவும், இது விமானம் மற்றும் விமானத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் போலீஸ் அதிகாரி கூறினார்.
கோவா வந்தவுடன் அந்த பயணி உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கோவாவில் உள்ள மோபா விமான நிலைய காவல் நிலையத்தில் பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Police have registered a case against a passenger for allegedly smoking a 'beedi' inside the toilet of a Delhi-Goa Akasa Air flight, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காசோலை துண்டுப் பிரசுரம் விநியோகம்: அதிமுகவினா் மீது வழக்குப் பதிவு

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு

ரயில் மோதி மாணவா்கள் காயமடைந்த சம்பவம் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



