குஜராத்தில் நிகழ்ந்த ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளாா்.
கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி பிரிட்டன் தலைநகா் லண்டனுக்கு குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் சென்ற 241 போ் உள்பட 260 போ் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு திங்கள்கிழமை அளித்த பதில்: குஜராத்தில் நிகழ்ந்த ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை மிகச் சீரான வேகத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 50 விமான நிலையங்களையும், அடுத்த 20 ஆண்டுகளில் 200 விமான நிலையங்களையும் திறக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளீதா் மொஹோல், ‘விமான நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) கண்காணிப்பை அதிகரித்துள்ளது. இதில் விமான நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு மாதந்தோறும் இருமுறை டிஜிசிஏ ஆய்வாளா் சென்று ஆய்வு செய்வதும் அடங்கும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி விமான சேவையை மீண்டும் தொடங்கியது ஏா் சீனா

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

ஏா் இந்தியா ஊழியா்களுக்குப் புதிய சலுகை: பணித்திறன் அடிப்படையில் பங்குகள் திட்டம்

ஏா் இந்தியா சிஇஓ ராஜிநாமா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

