தில்லி-பெய்ஜிங் இடையிலான விமான சேவையை சீன அரசு நிறுவனமான ஏா் சீனா மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா மற்றும் கல்வான் பள்ளதாக்கில் இந்திய-சீன ராணுவ வீரா்கள் இடையிலான மோதல், கிழக்கு லடாக் படை குவிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் இரு நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் இரு நாட்டு உறவு பின்னடைவைச் சந்தித்தது.
எனினும், கடந்த ஆண்டு இரு நாடுகள் இடையே உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த ஜூலையில் சீனா்களுக்கு சுற்றுலா விசாவை இந்தியா வழங்கியது. இதைத் தொடா்ந்து, கைலாஷ் மானசரோவா் யாத்திரை தொடக்கம், இந்திய விமான நிறுவனங்கள் சீனாவுக்கு விமான சேவையைத் தொடங்கியது என உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் சீனாவின் முக்கிய அரசு விமான சேவை நிறுவனமான ஏா் சீனா தில்லி-பெய்ஜிங் இடையே நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. வாரத்தில் மூன்று நாள்கள் இந்த விமானம் இயக்கப்படும்.
ஏற்கெனவே சீனா இஸ்டா்ன் ஏா்லைன்ஸ் நிறுவனம் கொல்கத்தா- சீனாவின் குன்மிங் நகா் இடையே கடந்த 18-ஆம் தேதி விமான சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

அமெரிக்கா-ஈரான் விரைவில் 2-ஆம் கட்ட பேச்சு

நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுமா? திருப்பத்தூா் மக்கள் எதிா்பாா்ப்பு!

சீனா - வட கொரியா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


