மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டிரம்ப் முன்னால் பேசுவதற்கு தைரியமில்லை: பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு!

ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவின் அனுமதி ஏன் தேவை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி

News image

டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி - கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2026, 6:56 am

ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவின் அனுமதி ஏன் தேவை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அனுமதியளிப்பதாக அமெரிக்கா கூறியதைக் குறிப்பிட்டு, "ரஷியாவிடம் எண்ணெய் வாங்க அனுமதியளிக்க அமெரிக்கா யார்? இந்தியாவுக்கு ஏன் அமெரிக்காவின் அனுமதி தேவை?

கடந்த சில மாதங்களாக, இந்திய நாட்டினர் பெரும் வேதனையுடன் இருந்து வருகின்றனர். அடுத்தடுத்து டிரம்ப் முன் நீங்கள் தலை வணங்குகிறீர்கள்.

அவருக்கு முன்னால் பேசுவதற்குகூட உங்களுக்கு தைரியம் இல்லை. டிரம்ப் முன்னால் நீங்கள் தலைவணங்க வேண்டியதன் நிர்ப்பந்தம் என்ன?

ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழைமையான நாடு இந்தியா. 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட நாடு இந்தியா. அடுத்தடுத்த துணிச்சலும் வீரமும் மிக்க வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது.

இதற்கு முன்பு இந்தியா எந்த நாட்டின் முன்பாகவும் தலை வணங்கியதே இல்லை. இந்திய வரலாற்றில் ஒருபோதும் இவ்வளவு பலவீனமான தலைமை இருந்ததில்லை.

டிரம்ப் ஏதேனும் நிர்ப்பந்தம் செய்கிறார் என்றால், இந்தியா மற்றும் இந்தியர்களின் நலனுக்காக தயவுசெய்து பதவியை ராஜிநாமா செய்து விடுங்கள்.

ஆனால், இந்தியாவை இப்படி தலைவணங்க விட வேண்டாம். நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் உள்ளனர்" என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.

மேலும், "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுகிறது. இது அகிம்சை மற்றும் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட நம் வரலாறு, நிலப்பரப்பு மற்றும் ஆன்மிக நெறிமுறைகளில் வேரூன்றியிருக்க வேண்டும்.

ஆனால், இன்று நாம் காண்பது இந்தியாவின் கொள்கை அல்ல; இது, சமரசம் செய்யப்பட்ட ஒரு தனிப்பட்ட நபரின் சுரண்டலின் விளைவே" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Summary

Why does India even need permission from America?, Aam Aadmi Leader Arvind Kejriwal asked

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.