தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரஷிய எண்ணெய் வாங்க அனுமதி! அமெரிக்காவின் மிரட்டல் எவ்வளவு காலம் தொடரும்?

ரஷியாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதியளித்தது குறித்து பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். (கோப்புப்படம்) - கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2026, 6:09 am

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அனுமதியளித்தது குறித்து பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

ரஷியாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதியளித்ததைக் குறிப்பிட்டு, "புதினிடம் எண்ணெய் வாங்கலாம் என்று தில்லி நண்பரிடம் சொன்னதாக டிரம்ப் கூறுகிறார்.

அமெரிக்காவின் மிரட்டல் இன்னும் எவ்வளவு காலம் தொடரும்? என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரிவிதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

இதனிடையே, மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், எண்ணெய்த் தட்டுப்பாட்டைக் குறைக்கும்வகையில், ரஷியாவிடமிருந்து 30 நாள்களுக்க்கு மட்டும் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ளது.

Summary

Congress Leader Jairam Ramesh calls US waiver on Russian oil American blackmail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.