மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவது குறித்து...

News image

கர்நாடக முதல்வர் சித்தராமையா - PTI

Updated On :6 மார்ச் 2026, 10:07 am

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை (மார்ச் 6) தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, கர்நாடகத்தில் சிறார்களின் நலனுக்காக சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்தியாவில் முதல் மாநிலமாக கர்நாடகத்தில் இந்தத் தடை விதிக்கப்படுவது நாடு முழுவதும் பெருமளவில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும், இதற்கான அமலாக்க நடைமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சிறார்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதையும், அச்சுறுத்தும் பதிவுகளால் பாதிக்கப்படுவதையும் தவிர்க்க, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தடையானது அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பக் கருவிகளைப் பெரிதும் சார்ந்துள்ள இளம் தலைமுறையினரை மிகவும் பாதிக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that the Karnataka government is banning the use of social media by minors under the age of 16.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.