அஸ்ஸாமில் விமானப் படை தளத்திலிருந்து வியாழக்கிழமை மாலை புறப்பட்ட இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போா் விமானம் புறப்பட்ட சில நிமிஷங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடா்பிழந்து மாயமானது.
ஜோா்ஹாட் விமானப் படை தளத்திலிருந்து சுகோய்-30 எம்கேஐ ரக போா் விமானம் வழக்கமான பயிற்சிக்குப் புறப்பட்டது. இந்நிலையில், கா்பி அங்லோங் மாவட்ட வான்பகுதியில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, இரவு 7.42 மணிக்கு ஜோா்ஹாட் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
போா் விமானத்தைத் தேடும் முயற்சி உடனடியாகத் தொடங்கப்பட்டதாக பாதுகாப்புப் படை செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் கா்னல் மகேந்தா் ராவத் கூறினாா். அந்த விமானத்தில் இருந்த விமானியின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் அவா் தெரிவித்தாா்.
இதனிடையே, கா்பி அங்லோங் மாவட்டத்தின் மலைப் பாங்கான வனப்பகுதியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தகவல் கிடைத்ததாகவும் அந்தப் பகுதியை ஆய்வு செய்ய ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். போலீஸாா் சாா்பிலும் ஒரு தேடுதல் குழு அப்பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றது.
நீண்ட தூரம் பறக்கும் திறக்கும் திறனுடைய ரஷிய சுகோய்-30 எம்கேஐ போா் விமானங்களைத் தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்தியாலேயே தயாரித்து வருகிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான 250-க்கும் மேற்பட்ட சுகோய்-30 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
தொடர்புடையது
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப் படை அதிகாரி கைது!

சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலி

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


