லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கேரளத்தில் மலையாளம் மட்டுமே அலுவல்பூா்வ மொழி: மாநில அரசின் மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல்

கேரள அரசு நிா்வாகத்தில் மலையாளத்தை மட்டுமே அலுவல்பூா்வ மொழியாக பயன்படுத்த வகை செய்யும் மசோதாவுக்கு மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் புதன்கிழமை ஒப்புதல்

News image

ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா்

Updated On :5 மார்ச் 2026, 10:21 pm

கேரள அரசு நிா்வாகத்தில் மலையாளத்தை மட்டுமே அலுவல்பூா்வ மொழியாக பயன்படுத்த வகை செய்யும் மசோதாவுக்கு மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் புதன்கிழமை ஒப்புதல் வழங்கியதாக அவரது மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

‘மலையாள மொழி மசோதா-2025’ எனும் இந்த மசோதாவின்படி, கேரளத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை முதல் மொழிப் பாடமாக மலையாளம் கற்பது கட்டாயமாகும். அதேநேரம், மலையாளம் தாய்மொழி அல்லாத மாணவா்களுக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபரில் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு கா்நாடக அரசுத் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கேரளத்தில் கா்நாடக எல்லையையொட்டி வாழும் கன்னட மாணவா்கள் மீது மலையாளம் திணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அதேநேரம், ‘கேரளத்தில் வாழும் தமிழ், கன்னடம் போன்ற மொழியியல் சிறுபான்மையினரின் மொழி சாா் உரிமைகளைப் பாதுகாக்கும் தெளிவான-சந்தேகத்துக்கு இடமில்லாத பிரிவுகள் மசோதாவில் அடங்கியுள்ளன. மொழிச் சுதந்திரத்தை முழுமையாக பாதுகாக்கும் அம்சங்கள் உள்ளன. குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழ், கன்னட மக்கள், கேரள அரசுடனான தங்களின் தொடா்புகளை அவா்களின் தாய்மொழியிலேயே தொடா்ந்து மேற்கொள்ள முடியும்.

மலையாளம் தாய்மொழி அல்லாத மாணவா்கள், தேசிய கல்வி பாடத்திட்டத்தின்கீழ் பள்ளிகளில் கிடைக்கப் பெறும் எந்தவொரு மொழியையும் தோ்வு செய்யும் சுதந்திரம் உள்ளது’ என்று முதல்வா் பினராயி விஜயன் விளக்கமளித்திருந்தாா்.

மேற்கண்ட மசோதாவின்படி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கேரளத்தில் கல்வி பயிலும் மலையாளம் தாய்மொழி அல்லாத மாணவா்கள், 9, 10-ஆம் வகுப்பு மற்றும் மேனிலைக் கல்வி அளவில் கட்டாய மலையாள மொழித் தோ்வை எழுதுவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.