லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!

ஈரானின் வெளியுறவு அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் செல்போன் மூலம் உரையாடியது குறித்து...

News image

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் - ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சி - (கோப்புப் படம்)

Updated On :5 மார்ச் 2026, 12:35 pm

ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை (மார்ச் 5) செல்போன் மூலம் உரையாடியுள்ளார். ஆனால், இருநாடுகளின் அமைச்சர்களிடையே நடைபெற்ற உரையாடல்கள் குறித்த எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனிக்கு, மத்திய அரசு இன்று இரங்கல் தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்திய அரசின் சார்பில் கையெழுத்திட்டார்.

கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போர் குறித்து, கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவிக்காததற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Minister S Jaishankar has spoken to Iranian Foreign Minister Seyyed Abbas Araqchi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.