அர்ஜூன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் திருமணத்தில் எம்.எஸ். தோனி, அம்பானி உள்பட பல்வேறு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல நட்சத்திரம் சச்சின் டெண்டுகல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கர் தனது நீண்ட நாள் தோழியும், தொழிலதிபருமான சானியா சந்தோக் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியாவின் திருமண நிகழ்ச்சி மும்பை தெற்கில் இன்று நடைபெற்றது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி, சச்சின் குடும்பத்தினர் விழாவை சிறப்பித்தனர்.
திருமணத்துக்கு முந்தைய சடங்குகளாக, நேற்று முன்தினம் இரவு மும்பையில் உள்ள ராயல் வெஸ்டர்ன் இந்தியா டர்ப் கிளப்பில் ‘மெஹந்தி’, ‘சங்கீத்’ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சச்சினின் நெருங்கிய நண்பர்களும் இந்திய அணியின் முன்னாள் வீரர்களுமான ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண நிகழ்வில்...
மும்பையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, அவரது மனைவி சாக்ஷி தோனி, பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அமீர்கான், அபிஷேக் பச்சன், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் அவரது மனைவி ஜெயா பச்சன், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், அவரது மனைவி ஹேசல், பாடகி ஆஷா போஸ்லே உள்ளிட்டோர் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர்.

முகேஷ் அம்பானி குடும்பத்தினர்.
ஐசிசி தலைவர் ஜெய் ஷா, இந்திய அணித் தேர்வர் அஜித் அகர்கர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார், அவரது மனைவி மணாலி வெங்சர்க்கார், கர்நாடக ஆல்ரவுண்டர் ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சங்கீத் மற்றும் திருமண நிகழ்ச்சியில் அர்ஜுனின் சகோதரி சாரா டெண்டுல்கர் மற்றும் திரை, அரசியல் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நடனமாடிய விடியோக்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2021 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், 5 போட்டிகளில் மட்டுமே இவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் தரப் போட்டியில் கோவா அணிக்காக 2022 ஆம் ஆண்டு அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர், முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார்.
யார் இந்த சானியா சந்தோக்?
மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காய் என்பவரின் பேத்திதான் சானியா சந்தோக். கிராவிஸ் குழுமத்தின் தலைவராக இருக்கும் ரவி காய், ‘தி புரூக்ளின் க்ரீமரி’ மற்றும் ‘பாஸ்கின் ராபின்’ ஆகிய பிரபல ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். இவரின் தந்தைதான் குவாலிட்டி ஐஸ்கிரீம் பிராண்டின் நிறுவனர். லண்டன் ஸ்கூள் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்ற சானியா, கால்நடை தொழில்நுட்பத்தில் டிப்ளோமா படித்துள்ளார். மும்பையில் உள்ள பாவ்ஸ் பெட் ஸ்பா அண்ட் ஸ்டோர் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.
Summary
Arjun Tendulkar married Saaniya Chandhok in a star-studded ceremony in South Mumbai on March 5. Several prominent personalities from cricket, Bollywood and business attended the celebrations alongside the Tendulkar family.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!

தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி இல்லை; பிரெவிஸ் பங்கேற்க வாய்ப்பு!

சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்

ஐபிஎல் 2026: எம்.எஸ். தோனி 2 வாரங்கள் விளையாட மாட்டார்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


