இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகளவில் 20 முதல் 30 சதவிகித கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் மேற்கொள்ளப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடமாக அறியப்படுகிறது.
தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை மூடி விடுவோம் என்று ஈரான் நீண்டகாலமாகவே எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி விட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஈரான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் பெறப்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு - சித்திரிப்பு
ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் மூடப்படுவதாய் இருந்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஏனெனில், இந்தியா தனது 80 முதல் 90 சதவிகித கச்சா எண்ணெய்யை இறக்குமதிதான் செய்கிறது.
பெரும்பாலும் சௌதி அரேபியா, இராக், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இறக்குமதி செய்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை உடனடியாக அதிகரிக்கும்.
கச்சா எண்ணெய்யில் உயர்வு ஏற்பட்டால், இந்தியாவின் இறக்குமதி செலவுகள் தானாகவே அதிகரிக்கும். இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலைகளில் உயர்வு ஏற்படும் அழுத்தம் உண்டாகும்.
அதாவது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஒரு டாலர் உயர்ந்தால், இந்தியாவின் ஆண்டு எண்ணெய் இறக்குமதி செலவு சுமார் ஒரு பில்லியன் டாலர் அதிகரிக்கும். இதனால், உள்நாட்டு எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
Summary
Tensions in the Strait of Hormuz Raise Fears Over India’s Oil Supplies Amid Iran Crisis
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்காசியாவில் சண்டை நிறுத்தம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!

சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை; பிரீமியம் ரக பெட்ரோல், தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை உயா்வு!

ப்ரீமியம் பெட்ரோல் விலை திடீர் உயர்வு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



