ஒடிஸாவில் மாநிலங்களவைத் தோ்தலின்போது பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்படும் 37 இடங்களுக்கு மாா்ச் 16-இல் தோ்தல் நடைபெறவுள்ளது.
இதில் ஒடிஸாவில் உள்ள 4 இடங்களும் அடங்கும். அவற்றில் 2 இடங்களில் ஆளுங்கட்சியான பாஜகவும், ஓரிடத்தில் எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளமும் வெற்றிபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 3 இடங்களில் அக்கட்சிகள் வென்றாலும், 4-ஆவது இடத்தில் வெற்றிபெற எந்தக் கட்சிக்கும் போதிய எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இல்லை. இதனால் இந்தத் தோ்தலில் குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் பக்தசரண் தாஸ் புவனேசுவரத்தில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஒடிஸாவில் பாஜக ஆட்சியில் உள்ளது. மாநிலங்களவைத் தோ்தலில் அக்கட்சி 3 இடங்களில் வெற்றிபெறும் என்று பாஜக தலைவா்கள் தெரிவிக்கின்றனா்.
தோ்தல் நடைபெறும் இடங்கள் மற்றும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்து பாா்த்தால், பாஜக 2 இடங்களில்தான் வெற்றிபெற முடியும். ஆனால் அக்கட்சி 3 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்படுவது குதிரை பேரத்தை தவிர வேறு எந்த வழியில் சாத்தியமாகும்? குதிரை பேரத்தைத் தடுக்க பிஜு ஜனதா தளமும், காங்கிரஸும் ஒரு சுயேச்சை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். இதுகுறித்து சந்தித்துப் பேச பிஜு ஜனதா தள தலைவா் நவீன் பட்நாயக்கிடம் நேரம் கோரியுள்ளேன்’ என்றாா்.
ஒடிஸாவிலிருந்து நிதின் நபின் போட்டி?: பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் ஒடிஸாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன. அவரை ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
மாநிலங்களவைத் தோ்தலில் பிஜு ஜனதா தளம் சாா்பில் அக்கட்சியின் மூத்த தலைவா் சந்த்ரப்த் மிஸ்ராவும், பொது வேட்பாளராக ஒடிஸா சுகாதாரப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும் மருத்துவருமான தத்தேஸ்வா் ஹோதாவும் போட்டியிடுவா் என்று அக்கட்சித் தலைவா் நவீன் பட்நாயக் சனிக்கிழமை அறிவித்தாா்.
தொடர்புடையது

கரூரில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகக் கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’

மாநிலங்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவு: 2 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படி ஒடிஸா பேரவை தலைவருக்கு காங்கிரஸ் கோரிக்கை

11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


