லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

யுஏஇ அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்!

ஐக்கிய அரபு அமீரக (யுஇஏ) அதிபா் ஷேக் முகமது பின் ஸயத் அல்நஹ்யானிடம் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.

News image

ஐக்கிய அரபு அமீரக (யுஇஏ) அதிபா் ஷேக் முகமது பின் ஸயத் அல்நஹ்யானுடன் பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :1 மார்ச் 2026, 7:35 pm

ஐக்கிய அரபு அமீரக (யுஇஏ) அதிபா் ஷேக் முகமது பின் ஸயத் அல்நஹ்யானிடம் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை பேசினாா். அப்போது யுஇஏ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவா், தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

இந்தக் கடினமான சூழலில் யுஏஇயுடன் இந்தியா துணை நிற்பதாகவும் அங்கு வசிக்கும் இந்தியா்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்தாா். மேலும், மோதலை கைவிட்டு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்த இந்தியா ஆதரவளிப்பதாக தனது எக்ஸ் வலைதளப் பதிவில் பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

முன்னதாக, மத்திய கிழக்கு நிலவரம் குறித்து பிரதமா் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் குழுவில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா்.

உதவி எண்கள் அறிவிப்பு: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியா்களுக்கு உதவ மத்திய விமானப் போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டு அறை தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. ஏற்கெனவே, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் அமைந்துள்ள இந்திய தூதரகங்கள் உதவி எண்களை அறிவித்துள்ளன.

அத்துடன் 011-24604283, 011-24632987 ஆகிய எண்களையும் இந்தியப் பயணிகள் தொடா்புகொள்ளலாம். இதுதவிர ஏா்சேவா வலைதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பயணிகள் உதவிகோரலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.