அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகள் கையாடல் விவகாரம் மிகவும் கவலைக்குரியது, அதேவேளையில் இவ்விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என பிஎஸ்பி தலைவர் மாயாவதி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்படுவது, கையாடல் செய்யப்படுவது, முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது குறித்த செய்திகள் தினமும் ஊடகங்களில் வெளியாவது மிகவும் தீவிரமானதும், கவலைக்குரிய விஷயமாகும்.
இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்தச் சூழலிலும் தண்டனையிலிருந்து தப்பவிடக் கூடாது. அதேசமயம் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதும் சரியல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் தொடர்பாக எதிர்காலத்தில் எவ்விதப் புகாரும் எழாதிருப்பதை உறுதிசெய்ய, நன்கொடைகள், காணிக்கை வரவு-செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் நாட்டின் பிற புகழ்பெற்ற கோயில்கள் பின்பற்றும் நடைமுறையைக் கையாள்வதும், இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதும் பொருத்தமானதாக இருக்கும். தெரிவித்தார்.
அரசியலில் குற்றமயமாதல், குற்றச் செயல்களை அரசியலாக்குதல், மதத்தை அரசியலாக்குதல், அரசியலைக் கண்மூடித்தனமாக மாற்றுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இதுவே முறையானதும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதும்.
நாட்டின் மற்றும் மக்களின் நலன் கருதி அரசியல் கட்சிகளுக்கு பிஎஸ்பி வழங்கும் அறிவுரை இது. நாட்டு மக்களுக்கான வேண்டுகோளும் இதுவே என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடைகள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக அயோத்தி காவல்துறையும், மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவும் விசாரணை நடத்திவரும் சூழலில் மாயாவதியின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.
இவ்வழக்குத் தொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கோயில் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
BSP chief Mayawati on Tuesday described the alleged embezzlement of donations at the Ram temple in Ayodhya as "extremely serious and worrying", while cautioning against politicising the issue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவருக்கு வீட்டுக் காவல்!

ராமர் கோவில் நிதி முறைகேடு வழக்கு: குற்றவாளியின் வீட்டில் நகை, ஆவணங்கள் பறிமுதல்!
நன்கொடை முறைகேட்டில் குற்றவாளிகள் தப்ப முடியாது: யோகி ஆதித்யநாத்!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK





