அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் முறைகேடு வெய்யதாகக் கூறப்படும் விவகாரத்தில் குற்றவாளிகள் எவரும் தப்பமுடியாது என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
டியோரியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதித்யநாத் கூறுகையில்,
மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதற்கு எதிராகத் தனது எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்திய அவர், அயோத்தி என்பது நம் அனைவரின் நம்பிக்கைக்கும் சநாதன தர்மத்திற்கும் ஒரு அடையாளமாகும்.
அயோத்தியின் மீது தவறான பாதையைச் செலுத்த வேண்டாம். ஸ்ரீ ராமரின் கண்ணியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை தொடங்கப்பட்டது. உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டை நாங்கள் வெளிக்கொண்டு வருவோம் என உறுதியளிக்கிறேன்.
பொதுமக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவது ஏற்றுக்கொள்ள முடியாது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சநாதன தர்மத்தின் நம்பிக்கையில் யார் தலையிட்டாலும் அவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். யாருக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படாது என்று அவர் எச்சரித்தார்.
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பான வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் முதற்கட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினர் கிருஷ்ண மோகன் அளித்த புகாரின் பேரில் இந்த எப்ஃஐஆர் பதிவு செய்யப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எங்கள் காவலில் உள்ளதாகவும், வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என அயோத்தி மூத்த காவல் கண்காணிப்பாளர் கௌரவ் குரோவர் தெரிவித்தார்.
Action began immediately after SIT report: Adityanath after arrests in Ram temple donation case .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் ராஜிநாமா!

தூய்மைப் பணியாளருக்கு வழங்கப்பட்ட உணவில் புழு: ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: ராஜ்நாத் சிங், மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




