தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (ஜூன் 26 - ஜூலை 2) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
பொருளாதாரம் மேம்பாடு அடையும். தாமதமான வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நல்ல முறையிலேயே நடக்கும். விவசாயிகள் கடுமையாக உழைத்து, அதற்கேற்ற மகசூலைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை துணிவுடனும் சுறுசுறுப்புடனும் செய்து முடித்து விடுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் ஆன்மிகப் பெரியவர்களை தரிசித்து ஆசி பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூன் 27, 28.
2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் நட்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் வங்கிக் கடன் பெற்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் வயல்வரப்பு பிரச்னைகளில் முடிவைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் சாதகமான சில விஷயங்கள் நடக்கும். கலைத்துறையினர் ரசிகர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பெண்கள் கணவரின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்கள் பெற்றோரிடம் அனுசரித்துச் செல்வீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூன் 29, 30, ஜூலை 1.
3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
வருமானம் சீராக இருக்கும். அதேநேரம் குடும்பத்தில் சிறிய மருத்துவச் செலவுகள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் விற்பனைகூடக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய விவசாய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சித் தலைமையுடன் மோதல், வாக்குவாதம் போன்றவற்றைத் தவிர்ப்பீர்கள். கலைத்துறையினர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பெண்கள் உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
நேர்முக, மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவில் எந்தத் தடையும் ஏற்படாது. வியாபாரிகள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு செயல்பாடுகளில் இருந்த தடுமாற்றம் குறையும். கலைத்துறையினருக்கு துறையில் உயர்ந்தோரின் ஆலோசனை புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்கள் போட்டிகளுக்காக கடினமான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
5சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
தெய்வ அனுக்கிரகம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தோர் நேசக்கரம் நீட்டுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக பிரச்னைகள் குறையக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினர் முக்கியமான ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்கள் நல்லது, கெட்டது இரண்டையும் சந்திப்பீர்கள். மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
உங்கள் கடமைகளை உணர்ந்து செயல்படுவீர்கள். அத்தியாவசியமான பொருள்களை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவுக்குத் தடை ஏற்படாது. வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவோடு புதிய சாதனைகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் லாபகரமான பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். அனைவரும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக பிரச்னைகளைச் சமாளித்து வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரிகள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசனத்துக்கு தேவையான முயற்சிகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருப்பீர்கள். கலைத்துறையினர் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பெண்கள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழுங்கள். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் கால்நடைகளுக்குச் சிறிது செலவழிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் போராட்டங்களில் உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவி செய்வீர்கள். பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விடவேண்டாம். மாணவர்கள் தீயோரிடமிருந்து விலகி விடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
உங்கள் செயல்கள் அனைத்தும் நேர்த்தியாக முடியும். சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். வியாபாரிகள் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் நவீன விவசாய உபகரணங்களை வாங்கி விளைச்சலைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். கலைத்துறையினர் சில தியாகங்களைச் செய்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
சுபகாரியங்கள் தொடர்பான பேச்சு சாதகமாக அமையும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்து கடன்கள் கிடைக்கும். வியாபாரிகள் வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தால் உபரி வருமானத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு பல விஷயங்கள் சாதகமாக அமையும். கலைத்துறையினர் சக கலைஞர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
பெண்கள் சுபநிகழ்ச்சிகளை நல்லபடியாக நடத்தி முடிப்பீர்கள். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - ஜூன் 19, 20, 21.
11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பெற்றோரின் ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவுடன் அனைத்து வேலைகளையும் பிரச்னையின்றி முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய யுக்தியுடன் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் நற்பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினரின் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பெண்கள் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பெற்றோரின் ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவுடன் அனைத்து வேலைகளையும் பிரச்னையின்றி முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய யுக்தியுடன் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் நற்பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினரின் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பெண்கள் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
Summary
Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week ( June 26 - July 2). Read and benefit.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஜூன் 19 - 25) 12 ராசிகளுக்கும்! லாபம் அதிகரிக்கும் இந்த ராசிக்கு!

வார பலன்கள் (ஜூன் 12 - 18) 12 ராசிகளுக்கும்! எதிர்பாராத அதிர்ஷ்டம் யாருக்கு?

வார பலன்கள் (ஜூன் 5 - 11) 12 ராசிகளுக்கும்! லாபம் அடையும் ராசி எது?

வார ராசிபலன்கள் (2026, மே 15 - 21) 12 ராசிகளுக்கும்! சிம்ம ராசிக்கு லாபம்!
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




