ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு இல்லை; ஆனால் காங்கிரஸின் கேள்விகளுக்கு பதில் வேண்டும்: பிரியங்க் கார்கே

எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு இல்லை; ஆனால் காங்கிரஸின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும் என்று பிரியங்க் கார்கே தெரிவித்தது பற்றி...

Priyank Kharge

கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே - படம் - ஏஎன்ஐ

Published On :29 ஜூன் 2026, 5:01 pm IST

எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு இல்லை; ஆனால் காங்கிரஸின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே திங்கள்கிழமை (ஜூன் 29) தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நாளை முதல் தொடங்க உள்ளது. இதனிடையே, இந்தத் திருத்தப் பணியில் தெளிவு வேண்டி தலைமைத் தேர்தல் ஆணையரிடம் எட்டு ஆட்சேபனைகளை மாநில அமைச்சரவை சார்பாக சமர்ப்பித்துள்ளதாக பிரியங்க் கார்கே தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

எஸ்ஐஆர் பணிகள் நடைபெறக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது கட்டாயம் நடைபெற வேண்டியதுதான். இது தேர்தல் ஆணையத்தின் உரிமை. அதிலும் குறிப்பாக, தெளிவான துல்லியமான வாக்காளர் பட்டியலை வழங்குவது தேர்த்கல் ஆணையத்தின் பொறுப்பு.

எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை. ஆனால் எங்களுடைய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் கூற வேண்டும். கர்நாடக அமைச்சரவை சார்பில், எஸ்ஐஆர் குறித்து எட்டு ஆட்சேபனைகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். அதற்கு அவர்கள் பதில் கூறுவார்கள் என்று நம்புகிறோம்.

ஒரு எழுத்துப்பிழைக்காக மட்டும் நீங்கள் (தேர்தல் ஆணையம்) ஒருவரின் வாக்குரிமையைப் பறிக்க முடியாது என்று பிரியங்க் கார்கே குறிப்பிட்டார்.

Summary

Karnataka Home Minister Priyank Kharge stated on Monday (June 29) that there is no objection to the SIR, but the Election Commission must answer the Congress party's questions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.