குஜராத்தில் எட்டு மாத சிங்கக்குட்டியைக் கொன்றதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம், ஜூனாகத் வனப்பிரிவின் துங்கர் சரகத்திற்கு உட்பட்ட ரபாரி நெஸ் பகுதியில், சுமார் எட்டு மாத வயதுடைய ஆண் சிங்கக்குட்டியின் உடல் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், ஜூனாகத் வனத்துறை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, அறிவியல் மற்றும் சட்ட நடைமுறைகளின்படி விசாரணையைத் தொடங்கினர்.
தொடர்ந்து மூன்று கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிங்கக்குட்டியின் உடற்கூராய்வை நடத்தினர். அதில் அதன் உடலில் கடுமையான காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. குற்றம் நடந்த இடம் மற்றும் அது தொடர்பான பிற இடங்களிலிருந்து முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு பவன் புனாபாய் சாவ்டா கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவானார். எனினும், ஜூனாகத் வனத் துறையின் மூன்று குழுக்கள் வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை போர்பந்தர் மாவட்டத்தின் குதியனா வட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தி அவரைக் கைது செய்தன.
விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சாவ்டா ஜூனாகத்திற்கு அழைத்து வரப்படுவதாக வனப் பாதுகாப்பு அதிகாரி அக்ஷய் ஜோஷி தெரிவித்தார். வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
Summary
The forest department in Gujarat has apprehended a man for allegedly killing a lion cub near Junagadh district of the state, officials said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தந்தை, தாய், தங்கையைக் கொன்ற வழக்கில் பெங்களூா் பெண் என்ஜினீயா் புதுச்சேரியில் கைது
மது போதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

குஜராத்தில் பாஜகவின் 4 மாநிலங்களவை வேட்பாளர்களும் வெற்றி!

கோவாவில் இறந்து கிடந்த சிறுத்தைக்குட்டி: விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



